அப்டேட்ஸ் : ஷாருக்கான் விபத்து!

அப்டேட்ஸ் : ஷாருக்கான் விபத்து!

செய்திகள் 23-Jan-2014 2:48 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மும்பையில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ‘ஹேப்பி நியூ இயர்’ படத்தில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறிய விபத்து ஒன்று நேர்ந்தது. ஹோட்டல் அறைக்கதவு ஒன்று இடித்ததில் அவருடைய தலையிலும், முகத்திலும் லேசான காயம் ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். இதனையடுத்து, மும்பை பாலாபாய் நானாவதி ஹாஸ்பிடலில் அவர் சுமார் 2 மணி அளவில் சேர்க்கப்பட்டாராம். தற்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் ஷாருக் கான் நலமாக இருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள். இதுகுறித்து ஷாருக் கானின் அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ தகவல் ஒன்றை தெரிவித்திருக்கிறார்கள். அதிலுள்ள விவரங்கள்..

‘‘மிஸ்டர் கானுக்கு படப்பிடிப்பின்போது சிறிய விபத்து ஒன்று நேர்ந்தது. அதனால் ஏற்பட்ட சிறிய காயங்களுக்காக அவரை ஹாஸ்பிடலில் சேர்த்துள்ளோம். ஆனால், பயப்படும்படியாக அவருக்கு எதுவும் நேரவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். அன்போடு விசாரித்த அனைவருக்கும் நன்றிகள்!’’ என தெரிவித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;