ஆயுர்வேத சிகிச்சையில் மோகன்லால்!

ஆயுர்வேத சிகிச்சையில் மோகன்லால்!

செய்திகள் 23-Jan-2014 1:57 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

''சில சமயம் அப்படி தான்! ஒன்றும் சொல்ல தோணாது. பேசாத கிளியைபோல ஒரு கூண்டில் முடங்கி கிடக்கும். இப்போது என் மனம் அதுபோலதான்! கடந்த இரண்டு மாதங்களாக ஓய்வில்லாத உழைப்பு! அந்த உழைப்பு என் மனதையும், உடலையும் சோர்வடைய வைத்தது. இதுபோன்ற சந்தர்பங்களில் நான் ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொள்வது வழக்கம். இந்த சிகிச்சை என் உடம்புக்கும் மனதுக்கும் புத்துணர்ச்சியை தரும். என் மனதையும், உடம்பையும் அடக்கி இனி சில மௌன நாட்கள்… அந்த நேரம் இது! அந்த சிகிச்சை முடிந்ததும் பல புதிய சிந்தனைகளுடன், விஷயங்களுடன் தெம்புடன் வருவேன்!’’ இப்படி தனது மைக்ரோ ப்ளாகில் மலையாளத்தில் குறிப்பிட்டிருக்கிறார் சூப்பர் ஸ்டார் மோகன்லால்!

மோகன் லால் கடந்த சில ஆண்டுகளாக இதுபோன்ற ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவது வழக்கம். மலையாள திரையுலகின் பிரபலங்கள் தவிர இந்த சிகிச்சையை எடுத்துக்கொள்ள தழிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த், விக்ரம் உட்பட பலருக்கு முன்னுதாரணமாக விளங்கி வருபவர் மோகன்லால் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;