அஜித்தின் அடுத்த படம் ஸ்டார்ட்...

அஜித்தின் அடுத்த படம் ஸ்டார்ட்...

செய்திகள் 23-Jan-2014 4:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆரம்பம்’ வெற்றியையே முழுதாக கொண்டாடி முடிப்பதற்குள் ‘தல’ ரசிகர்களுக்கு ‘வீரம்’ படம் மூலம் விருந்து படைத்தார் அஜித். தற்போது இப்படம் பரபரப்பாக வசூல் செய்து கொண்டிருக்கும்போதே அஜித்தின் அடுத்த படத்தின் பூஜைக்கும் நாள் குறித்துவிட்டார்கள். கௌதம் மேனன் இயக்கத்தில் ‘தல’யின் 55வது படத்தின் பூஜை வருகிற ஃபிப்ரவரி 6-ஆம் தேதி நடைபெறவிருக்கிறதாம். இந்த தேதியில் படத்தின் பூஜையைப் போடுவதற்கும் காரணம் இருக்கிறதாம். அதாவது, வழக்கமாக தனது படங்களின் பூஜையை வியாழக்கிழமை அன்றுதான் வைப்பாராம் தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம். அந்த சென்டிமென்ட்படியே தற்போது அஜித்தின் படத்தையும் ஃபிப்ரவரி 6-ஆம் தேதி வியாழக்கிழமை அன்றே துவங்குகிறார்கள்.

இந்தப் படத்தில் அஜித்திற்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்க, இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

த்ரிஷா பிறந்தநாள் ஸ்பெஷல் - பயம் பாடல் வீடியோ


;