இன்றும் முடங்கிய தெலுங்கு சினிமா!

இன்றும் முடங்கிய தெலுங்கு சினிமா!

செய்திகள் 23-Jan-2014 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கு திரைப்பட உலகின் பழம்பெரும் நடிகரும், தயாரிப்பாளரும், நடிகர் நாகார்ஜுனாவின் தந்தையுமான அக்கினேனி நாகேஸ்வர ராவ் நேற்று காலை ஹைதராபாத்தில் காலமானார். அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது அன்னபூர்ணா ஸ்டியோவில் வைக்கப்பட்டது. இவரது மறைவையொட்டி நேற்றும், இன்றும் தெலுங்கு திரைப்பட உலகில் எந்த வேலைகளும் நடைபெறவில்லை. அத்துடன் எந்த தியேட்டர்களிலும் சினிமா காட்சிகளும் நடைபெறவில்லை.

நாகேஸ்வர ராவின் இறுதி சடங்கு இன்று நடக்கிறது. இதில் ஏராளமான தென்னிந்திய சினிமா பிரமுகர்களும், ரசிகர்களும் கலந்துகொள்கிறார்கள். தெலுங்கு சினிமாவில் ஜாம்பவானாக விளங்கிய நாகேஸ்வர ராவின் மறைவு தெலுங்கு சினிமா உலகில் பெரும் சோகத்தை உருவாக்கியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;