விஜய்யை இயக்கும் சிம்புதேவன்!

விஜய்யை இயக்கும் சிம்புதேவன்!

செய்திகள் 23-Jan-2014 11:53 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் - ஏ.ஆர்.முருகதாஸ் படத்திற்குப் பிறகு, அட்லியின் இயக்கத்தில் விஜய் நடிக்க இருக்கிறார் என கடந்த வாரம் முழுக்க செய்திகள் ரவுண்டு கட்டி அடித்தன. ஆனால், தற்போது திடீரென விஜய் படத்தை இயக்கும் அதிர்ஷ்டம் இயக்குனர் சிம்புதேவனுக்கு அடித்திருக்கிறது. தனது நீண்டநாள் மேனேஜரும், பி.ஆர்.ஓ.வுமான பி.டி.செல்வகுமார் தயாரிக்கும் படத்தையே சிம்புதேவன் இயக்க இருக்கிறார். இதற்காக சிம்புதேவன் அட்வான்ஸ் வாங்கிவிட்டதாகவும் விஜய்யின் நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன. ‘இம்சை அரசன் 23ஆம் புலிகேசி’, ‘அறை எண் 305ல் கடவுள்’, ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படங்களைத் தொடர்ந்து தற்போது ‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ படத்தை சிம்புதேவன் இயக்கியிருக்கிறார். இப்படம் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது. விஜய் & ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் வேலைகள் முடிவடைந்ததும் விஜய் - சிம்புதேவன் பட வேலைகள் துவங்கும் என்கிறார்கள். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவருமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவண் - தீராத விளையாட்டு பிள்ளை பாடல் வீடியோ


;