தியேட்டர்களில் புதிய விதிமுறைகள்!

தியேட்டர்களில் புதிய விதிமுறைகள்!

செய்திகள் 23-Jan-2014 11:27 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழகத்தில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தமிழக காவல்துறையினர் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனை தொடர்ந்து சென்னையில் உள்ள சினிமா தியேட்டர்களில் பாதுகாப்பை பலப்படுத்தவும், கண்காணிப்பு கேமராக்களை பொருத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவின் பேரில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. கூடுதல் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 75 தியேட்டர் மேனேஜர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் ஒவ்வொரு தியேட்டர் உரிமையாளர்களும் செயல்படுத்த வேண்டிய பாதுகாப்பு நடவடிகைகள் குறித்து போலீஸ் தரப்பில் விளக்கமாக கூறப்பட்டது. போலீஸ் தரப்பில் கூறப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை தங்களது தியேட்டர்களில் உடனே அமல்படுத்துவதாக தியேட்டர் மேனேஜர்களும் ஒப்புக்கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;