கணவரை தேடும் நயன்தாரா!

கணவரை தேடும் நயன்தாரா!

செய்திகள் 23-Jan-2014 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மாறுபட்ட கதை அமைப்பில் ஹிந்தியில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘கஹானி’. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக வித்யா பாலன் சிறப்பாக நடித்திருந்தார். இப்படம் ‘அனாமிகா’ என்ற பெயரில் தெலுங்கில் ரீ-மேக் ஆகிறது. இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நயன்தாரா நடிக்க, வைபவ், பசுபதி ஆகியோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கிறார்கள். சேகர் காமுல்லா இயக்கி வரும் இப்படம் தமிழிலும் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், மாறுபட்ட பாணியில் இப்படத்தின் விளம்பர வேலைகளை துவங்கியுள்ளனர் படக்குழுவினர்! கணவரைத் தேடும் ஒரு பெண்மணியின் கதையை சொல்லும் இந்தப் படம் சம்பந்தமாக தமிழகத்தின் சுவர்களில் ஒட்டப்பட்டுள்ள ஒரு போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இமைக்கா நொடிகள் - டீஸர்


;