மீண்டும் உதயநிதியுடன் நயன்தாரா!

மீண்டும் உதயநிதியுடன் நயன்தாரா!

செய்திகள் 23-Jan-2014 10:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாக நடித்து, தயாரித்துள்ள ‘இது கதிர்வேலன் காதல்’ படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் தனது ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் படம் ‘நண்பேன்டா’. இயக்குனர் எம். ராஜேஷிடம், ‘சிவா மனசுல சக்தி’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படங்களில் இணை இயக்குனராக பணியாற்றிய ஏ.ஜெகதீஷ் இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார். ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தில் உதயநிதியுடன் ஜோடியாக நடித்த நயன்தாராவே இதிலும் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார். உதயநிதியுடன் தொடர்ந்து நடித்து வரும் சந்தானம் இப்படத்திலும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

அழகிய காதல் கதையினை நட்பை மையமாக வைத்து ஜனரஞ்சகமாக உருவாக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் இன்று துவங்கியது. இந்தப் படத்திற்கு உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படங்களுக்கு தொடர்ந்து இசை அமைத்து வரும் ஹாரிஸ் ஜெயராஜே இசை அமைக்க, ஒளிப்பதிவு பொறுப்பை பாலசுப்ரமணியம் கவனிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தில்லுக்கு துட்டு - டிரைலர்


;