விக்ரமின் அடுத்த படம்!

விக்ரமின் அடுத்த படம்!

செய்திகள் 22-Jan-2014 4:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆஸ்கார் மூவீஸ் தயாரிப்பில் விக்ரம், எமி ஜாக்ஸன் நடிப்பில் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கும் படம் ‘ஐ’. அதிக எதிர்பார்ப்பில் உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. தற்போது இப்படத்தில் பிஸியாக இயங்கி வரும் விக்ரம் நேரம் கிடைக்கும் சமயங்களில் இளம் இயக்குனர்கள் பலரிடமும் கதை கேட்டு வருகிறார்.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ படங்களை இயக்கிய சரவணனும் விக்ரமிடம் ஒரு கதையை கூறியுள்ளார். கதையை ரசித்துகேட்ட விக்ரமிற்கு கதைப்பிடித்து விட்டாலும் இன்னும் ஓகே சொல்லவில்லையாம்! விரைவில் எல்லாம் கைகூடும் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறார் இயக்குனர் சரவணன்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போங்கு - டிரைலர் 2


;