எஸ்.எஸ்.ஆர். ஆஸ்பத்திரியில் அனுமதி!

எஸ்.எஸ்.ஆர். ஆஸ்பத்திரியில் அனுமதி!

செய்திகள் 22-Jan-2014 2:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எஸ்.எஸ்.ஆர். என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன். ஆரம்ப காலகட்டங்களில் நாடகத்தில் நடித்து பின்னர் 'பராசக்தி' படத்தில் சிவாஜியுடன் நடித்தார். ஏ.பீம்சிங் இயக்கிய 'அம்மையப்பன்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பல வெற்றிபடங்களில் கதாநாயகனாக நடித்தார். நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகங்களைக் கொண்டவர்.

சளி தொந்தரவு காரணமாக வீட்டிலிருந்தே சிகிச்சை பெற்றுவந்த அவருக்கு திடீர் பமயக்கம் ஏற்பட்டதால் அவரை கோடம்பாக்கம் 'மெட்வே' மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் சேர்த்தனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் அவரது உடல்நலம் குறித்து நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், செயலாளர் ராதரவி ஆகியோர் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;