‘த்ரிஷியம்’ படத்திற்கு கண்டனம்!

‘த்ரிஷியம்’ படத்திற்கு கண்டனம்!

செய்திகள் 22-Jan-2014 2:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கடந்த டிசம்பர் 19ஆம் தேதி வெளியாகி ஒரு மாத காலத்திற்குள்ளாகவே கிட்டத்தட்ட 35 கோடிகளை வசூல் செய்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘த்ரிஷியம்’ மலையாளப்படத்திற்கு பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதுவரை இப்படத்தைப் பற்றிய எந்தவித மாற்றுக் கருத்தும் வெளிவராமலிருந்த நிலையில், தற்போது படத்திற்கு பெரும் கண்டனம் ஒன்றைத் தெரிவித்திருக்கிறார் கேரளாவின் காவல் உயர் அதிகாரியான சென் குமார். சமீபத்தில் படத்தைப் பார்த்த அவர், ‘‘இப்படம் ரசிகர்களுக்கு தவறான பாதையைக் காட்டும்படி படமாக்கப்பட்டுள்ளது’’ என ‘த்ரிஷ்யம்’ படத்தின் மீது குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியிருக்கிறார்.

‘‘த்ரிஷியம் படத்தில் ஒரு கொலைக்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை தவறாக சித்தரித்திருக்கிறார்கள். இப்படம் குறித்தோ அல்லது படத்தின் கதையம்சம் குறித்தோ நான் எதுவும் சொல்ல வரவில்லை. ஆனால் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறும் படங்களில் நடிக்கும் முன்பு ஒருமுறைக்கு இரண்டு முறை மோகன் லால் யோசித்திருக்க வேண்டும். ஏனென்றால் திரைப்படங்கள் ரசிகர்களிடம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதனால் ரசிகர்களைப் பாதிக்கும்படியா காட்சிகள் இருக்கும் படங்களை ஒப்புக்கொள்ளும்போது நன்றாக யோசிக்க வேண்டியது அவசியம்’’ என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார்.

ஒரு மரணத்தை வெளியில் தெரியாமல் மறைப்பதற்கு முயல்வதுபோன்ற காட்சிகள் ‘த்ரிஷியம்’ படத்தில் இடம்பெற்றிருப்பதே அவரது கண்டனத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;