அஞ்சான் 30 நாள்!

அஞ்சான் 30 நாள்!

செய்திகள் 22-Jan-2014 11:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘அஞ்சான்’ படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வருகிறது. முதல்கட்ட படப்படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு, தற்போது இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பை மும்பை மற்றும் மஹாராஷ்டிராவின் சுற்றுப்புற பகுதிகளில் இன்றிலிருந்து ஆரம்பிக்கிறார்கள். தொடர்ந்து 30 நாட்கள் இங்கு படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள். சூர்யாவுக்கு ஜோடியாக சமந்தா நடிக்கும் இப்படத்தில் அஜித், விஜய்யைத் தொடர்ந்து சூர்யாவுக்கும் வில்லனாகிறார் வித்யூத் ஜாம்வால். திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு இசை யுவன் ஷங்கர் ராஜா. ஒளிப்பதிவு சந்தோஷ் சிவன்.

இப்படத்தின் ஆரம்பப் பாடல் ஒன்றிற்கு சூர்யாவுடன் இணைந்து ஆடியிருக்கிறார் பாலிவுட் நடிகை மரியம் ஜக்ரியா. இன்னொரு குத்துப் பாடல் ஒன்றிற்கு ‘சோலோ நடனம்’ ஆட சோனாக்ஷி சின்ஹாவுடனும் பேச்சுவார்த்தை நடந்து வருகிறதாம். இப்படத்தில் முக்கியமான கேரக்டர் ஒன்றில் இயக்குனர் லிங்குசாமியும் முதன்முறையாக நடிக்க இருக்கிறார் என செய்திகள் பரவி வருகின்றன. வித்தியாசமான கேரக்டர்களில் நடித்துவரும் சூரியாவிற்கு இப்படம் மேலும் புகழ் சேர்க்கும் படமாக இருக்கும் என்கிறார் வெற்றிப்பட இயக்குனர் லிங்குசாமி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;