விஷ்ணுவர்த்தனுக்கு தத்துக் கொடுத்த தரணி!

விஷ்ணுவர்த்தனுக்கு தத்துக் கொடுத்த தரணி!

செய்திகள் 22-Jan-2014 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆஹா கல்யாணத்தின்’ இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்குனர் விஷ்ணுவர்தனிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்தவர். இப்படத்தின் பாடலை வெளியிட்டு பேசிய விஷ்ணுவர்த்தன் ‘‘எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. கோகுல் இயக்குனராகியிருப்பது எனக்கு குழந்தை பிறந்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது. மிகவும் திறமையானவர். அவர் ஒரு விளம்பர படம் எடுத்துக் கொண்டிருந்தபோது நான்தான் அவரிடம் என்னிடம் உதவியாளராக வேலை செய்ய கேட்டுக் கொண்டேன்’’ என்றார்.

பின்னர் பேசிய தரணி, ‘‘இந்தக்குழந்தை நான் தத்துக் கொடுத்தது. முதலில் என்னிடம் உதவி இயக்குனராக வேலை செய்ய கோகுல் அணுகிய போது ‘நீ வேறு இயக்குனர்களிடம் வாய்ப்புக் கேள். யாரும் முன் வராத பட்சத்தில் நான் சேர்த்துக் கொள்கிறேன்’’ என்று சொன்னதோடு, ‘‘கோகுல் எனது நெருங்கிய நண்பரின் மகன். அவர்கள் வீட்டில்தான் நான் வளர்ந்தேன்’’ என்றார் தரணி.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அதே கண்கள் - டீசர்


;