பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்!

பழம்பெரும் நடிகர் நாகேஷ்வர ராவ் மரணம்!

செய்திகள் 22-Jan-2014 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

புகழ் பெற்ற பழம்பெரும் நடிகரும் நாகார்ஜுனாவின் தந்தையுமான நடிகர் நாகேஷ்வர ராவ் (வயது 90) இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் மரணமடைந்தார். 17 வயதில் நடிக்க வந்த அவர் இதுவரையில் 250 படங்களுக்கு மேல் தமிழ், தெலுங்கு உட்பட பல மொழிகளில் நடித்தவர். 1953ல் வேதாந்தம் ராமைய்யா இயக்கத்தில் வெளிவந்த 'தேவதாஸ்' திரைப்படம் இவருக்கு பெரும்புகழை பெற்றுத் தந்தது. 1990ம் ஆண்டில் இவருக்கு தாதாசஹேப் பால்கே அவார்டு கொடுத்து கௌரவிக்கபட்டது.

கடைசியாக தனது மகன் நாகார்ஜுனா மற்றும் பேரன் நாக சைதன்யாவுடன் இணைந்து ‘மனம்’ என்ற தெலுங்குப் படத்தில் நடித்துக் கொண்டிருந்தார். மூன்று தலைமுறைகள் இணைந்து நடிக்கும் முதல் படம் என்ற பெருமையோடு உருவாகிக் கொண்டிருந்த இப்படத்தின் வேலைகள் முடியும் முன்பே அவர் விண்ணுலகம் சென்றது, அவரது குடும்பத்தாருக்கு மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகத்துக்கே பெரிய இழப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அவரின் மறைவுக்கு ‘டாப் 10 சினிமா’ தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. அவரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;