நானியை வெட்கப்பட வைத்த வாணிகபூர்!

நானியை வெட்கப்பட வைத்த வாணிகபூர்!

செய்திகள் 22-Jan-2014 10:25 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இந்தியில் பிரம்மாணடமான காதல் கதைகளுக்கு புகழ்பெற்ற நிறுவனம் யாஷ்ராஜ் ஃபிலிம்ஸ். 40 வருடங்களுக்கு மேலாக பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இந்நிறுவனம் முதன்முறையாக தமிழில் ‘ஆஹா கல்யாணம்’ என்ற படத்தை தயாரித்திருக்கிறது. நாயகனாக நானி, நாயகியாக வாணிகபூர் நடிக்கும் இப்படத்தில் சிம்ரன் ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீடு சென்னை லீலா பாலஸ் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. கல்யாணமேடை போல் அமைக்கபட்டிருந்த விழா மேடை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. நானியின் நண்பர் நடிகர் விஜய் சேதுபதி, இயக்குனர்கள் சமுத்திரக்கனி, தரணி ஆகியோர் ஒவ்வொரு பாடலாக வெளியிட்டனர்.

அறிமுக நடிகை வாணிகபூரை ரசிகர்களுக்கு சிம்ரன் அறிமுகம் செய்து வைத்தார். பாம்பே இறக்குமதியான வாணிகபூரிடம் நானியிடம் நீங்கள் கற்றுக்கொண்ட தமிழ் வார்த்தை எது என கேட்டபோது ‘மூடு’ என்று அவர் சொல்ல அரங்கு முழுவதும் சிரிப்பு சத்தம். நானி தலையில் கையை வைத்து ‘அய்யோ...’ என அலறிச் சிரித்தார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;