சமீரா ரெட்டி திடீர் திருமணம்!

சமீரா ரெட்டி திடீர் திருமணம்!

செய்திகள் 22-Jan-2014 10:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இணையதளங்களில் தற்போதைய ‘ஹாட் டாபிக்’ சமீரா ரெட்டியின் திடீர் ரகசிய திருமணம் பற்றிய செய்திகள்தான். நடிகை சமீரா ரெட்டிக்கும் தொழிலதிபர் அக்ஷய் வர்தேவுக்கும் கடந்த டிசம்பர் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதையடுத்து வரும் ஏப்ரலில் திருமணம் செய்ய தேதியும் குறிக்கப்பட்டது. இந்நிலையில் திடீரென நேற்று மாலை இரண்டு குடும்பத்தார்களின் முக்கியமான உறுப்பினர்கள் மற்றும் சில நண்பர்கள் முன்னிலையில் சமீரா ரெட்டிக்கும், அக்ஷய்க்கும் திருமணம் ரகசியமாக நடந்து முடிந்தது.

மகாராஷ்ட்ரிய பாரம்பரிய முறைப்படி இவர்களின் திருமணம் மும்பையில் உள்ள ஒரு பெரிய பேலஸில் நடைபெற்றது. ஏப்ரலில் தேதி குறிக்கப்பட்டு, இப்படி திடீரென அவசர அவசரமாக திருமணம் செய்ய வேண்டிய அவசியம் என்ன என்பது குறித்து இரு தரப்பிலிருந்தும் இதுவரை எந்தவிதமான அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;