முழுக்க முழுக்க ரயிலில் படமான படம்!

முழுக்க முழுக்க ரயிலில் படமான படம்!

செய்திகள் 21-Jan-2014 5:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

முழுக்க முழுக்க ரயிலில் படமான படம்! 'என்.சி.ஆர் மூவி கிரியேஷன்ஸ்’ என்ற புதிய பட நிறுவனம் சார்பாக கே.சுந்தரராஜன், கே.பாலசுப்ரமணியன், என்.ராஜேஷ்குமார் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’ என்று வித்தியாசமாக பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தில் மிதுன் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னொரு முக்கிய கதாபாத்திரத்தில் ஆதவன் நடிக்கிறார். மிருதுலா கதாநாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் அனூப் அரவிந்த் நடிக்கிறார்.

என்.எஸ். ராஜேஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு விஜய் பெஞ்சமின் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் கதை, திரைக்கதை, வசனம், இயக்குகிறார் என்.ராஜேஷ்குமார். படம் பற்றி இயக்குனர் என்.ராஜேஷ்குமார் கூறும்போது, ‘‘இதுவரை டிரெயினில் படமாக்கப்பட்ட எல்லா படங்களும் வெற்றி பெற்றிருக்கிறது. அந்தப் படங்களெல்லாம் ஒரு பாடல், அல்லது சண்டை காட்சிகள் இல்லையென்றால் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப் பட்டிருக்கும். ஆனால் இந்த படத்தில் 90 % காட்சிகள் மற்றும் பாட்டு, ஃபைட் என எல்லாமே ரயிலில் தான் படமாக்கி இருக்கிறோம். இந்தப் படத்தில் டி.ஆர்.பாடிய ‘ஸ்டாரோ மாரோ .... கிர் கிர்ருங்குது...’ என்ற பாடல் காட்சி ஹைதராபாத்தில் பார் செட் போட்டு மிதுன், ஆதவன் மற்றும் 30 நடன கலைஞர்கள் பங்கேற்க படமாக்கப் பட்டது. முழுக்க முழுக்க காதல் கதையாக உருவாகியுள்ளது ‘சிக்கிக்கு சிக்கிக்கிச்சு’.

‘நாளைய இயக்குனர்’ போட்டியில் கலந்துகொண்டு வென்று இப்படத்தின் மூலம் இயக்குனராகி இருக்கிறேன். துபாயில் உள்ள ஏர்லைன்ஸ் ஒன்றில் பணியாற்றிக்கொண்டே இயக்குனராகி இருக்கிறேன். இன்று முன்னணி நடிகராக இருக்கும் விஜய்சேதுபதி முன்பு துபாயில் வேலை செய்தவர். அவரும் நானும் ரூம் மேட்ஸ். இன்று அவர் நடிகராக வெற்றி பெற்றிருக்கிறார் எனும்போது சந்தோஷமாக இருக்கு’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - அஸ்வின் தாத்தா முன்னோட்டம் டீசர்


;