மலேசியா போலீஸாக சரத்குமார்!

மலேசியா போலீஸாக சரத்குமார்!

செய்திகள் 21-Jan-2014 3:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர் அத்தியமான் இயக்கிய தமிழ், ஹிந்திப் படங்களிலும், மேஜர் ரவி இயக்கிய சில மலையாள படங்களிலும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ராபின்சன். பல ஆண்டு கால முயற்சிக்குப் பிறகு இவர் முதன் முதலாக இயக்கியிருக்கும் தமிழ் படம் ‘நறுமுகை’. இந்தப் படத்தில் மலேசியாவை சேர்ந்த போலீஸ் அதிகாரியாக முக்கிய கேரக்டரில் சரத்குமார் நடிக்க, புதுமுகம் அர்ஜுன் லால், இஷிதா, மனோஜ் கே.ஜெயன், எம்.எஸ்.பாஸ்கர், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். ‘நிமிதா புரொடக்‌ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் பிந்து ஜான் தயாரித்திருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு மலேசியா, சென்னை, கோயம்பத்தூர் ஆகிய இடங்களில் நடந்துள்ளது. இந்தியா - மலேசியா சம்பந்தப்பட்ட ஒரு த்ரில்லர் கதையாம் படம்! விரைவில் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ராபின்சன் பல விளம்பர படங்களிலும் பணியாற்றி அனுபவம் பெற்றவராவார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அண்ணாதுரை - டிரைலர்


;