முருகதாஸுடன் மோதும் பிரபுதேவா!

முருகதாஸுடன் மோதும் பிரபுதேவா!

செய்திகள் 21-Jan-2014 2:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டில் இரண்டு கோலிவுட் பிரபலங்களின் படைப்புகள் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது. தமிழில் ஹிட்டான ‘துப்பாக்கி’ படத்தை ஹிந்தியில் ‘ஹாலிடே’ என்ற பெயரில் இயக்கி வருகிறார் ஏ.ஆர்.முருகதாஸ்! அக்‌ஷய்குமார் - சோனாக்‌ஷி சின்ஹா ஜோடியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது! அஜய் தேவ்கனை வைத்து பிரபுதேவா இயக்கி வரும் ‘ஆக்‌ஷன் ஜாக்ஸன்’ படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட முடியும் தறுவாயில் இருக்கிறது.

இந்தப் படத்தில் அஜய் தேவ்கனுடன் சோனாக்‌ஷி சின்ஹா, யாமி கௌதம், மானஸ்வி என மூன்று ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்! இந்த இரண்டு படங்களையும் வருகிற ஜூன் 6—ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, படத்தின் வேலைகளை விறுவிறுப்பாக செய்து வருகிறார்கள்! இப்படி ஒரே நாளில் இரண்டு கோலிவுட் பிரபலங்கள் இயக்கிய படங்கள் ரிலீசாவது பாலிவுட்டினரிடையே பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்பைடர் - டிரைலர்


;