சன்னி தியோலின் ’காயல் 2’

சன்னி தியோலின் ’காயல் 2’

செய்திகள் 21-Jan-2014 12:08 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏற்கெனவே வெற்றிபெற்ற படங்களின் தொடர்ச்சிகள் வந்து ஹிட் அடித்துக் கொண்டிருக்கும் சீசன் இது! தமிழில் ‘சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக ‘சிங்கம் 2’ வெளிவந்து சக்கை போடு போட, ஹிந்தியிலும் ’சிங்கம்’ படத்தின் தொடர்ச்சியாக ‘சிங்கம் 2’ உருவாகி வருகிறது. இந்தப் படத்துடன் மற்றுமொரு ஹிந்தி படத்தின் இரண்டாம் பாகமும் உருவாகிறது. சன்னி தியோல் நடிப்பில் 1990-ல் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற படம், ‘காயல்’.

இந்தப் படத்தை ராஜ்குமார் சந்தோஷி இயக்கியிருந்தார். கிட்டத்தட்ட 23 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படத்தின் இரண்டாம் பாகமாக ‘கயல் 2’ படத்தை எடுக்க இருக்கிறார்கள்! இந்தப் படத்தில் சன்னி தியோலே ஹீரோவாக நடிக்க, அவரே படத்தையும் இயக்குகிறார். 1999-ல் வெளியான ‘தில்லகி’ என்ற படத்தை இயக்கி நடித்த சன்னி தியோல் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு பிறகு இயக்கும் படம் இது. முதல் ‘காயல்’ படத்தில் சன்னி தியோலுக்கு ஜோடியாக மீனாக்‌ஷி சேஷாத்ரி நடித்திருந்தார். ‘காயல் 2’ படத்தில் சன்னி தியோலுக்கு ஜோடி யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நம்ம ஊர் பிரகாஷ் ராஜ் மற்றும் ஓம்புரி ஆகியோர் நடிக்க கமிட் ஆகியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சில சமயங்களில் - டிரைலர்


;