‘சிங்கம் 2’-வில் கரீனா கபூர்!

‘சிங்கம் 2’-வில் கரீனா கபூர்!

செய்திகள் 21-Jan-2014 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழில் சூப்பர் ஹிட்டான ‘சிங்கம்’ படம் கன்னடம், ஹிந்தி மொழிகளிலும் ரீ-மேக் ஆகி வெற்றி பெற்றது! ‘சிங்கம்’ ஹிந்தி ரீ-மேக்கில் அஜய் தேவ்கன் - காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்க, ரோஹித் ஷெட்டி இயக்கியிருந்தார். கடந்த 2011 ஆகஸ்ட் மாதம் வெளியாகிய இந்தப் படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து இப்போது ‘சிங்கம் 2’ படம் உருவாகி வருகிறது. இதனை முதல் பாகத்தை இயக்கிய ரோஹித் ஷெட்டியே இயக்க, முதல் ‘சிங்கம்’ படத்தில் நடித்த அஜய் தேவ்கனே இதிலும் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஆனால் முதல் ‘சிங்கம்’ படத்தில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக நடித்த காஜல் அகர்வாலும், வில்லனாக நடித்த பிரகாஷ்ராஜும் இரண்டாம் பாகத்தில் இல்லை. இதில் அஜய் தேவ்கனுக்கு ஜோடியாக கரீனா கபூர் நடிக்க வில்லனாக அமோல் குப்தா நடிக்கிறார். ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்திற்குப் பிறகு ரோஹித் ஷெட்டி இயக்கும் இப்படத்தை அடுத்த ஆண்டு (2015) ஆகஸ்ட் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;