தொடர் சர்ச்சையில் அனிருத்!

தொடர் சர்ச்சையில் அனிருத்!

செய்திகள் 20-Jan-2014 6:30 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சினிமாவில் தற்போது முன்னணியில் இருக்கும் இசை அமைப்பாளர் அனிருத்! தொடர்ந்து பல ஹிட் பாடல்களை தந்த இவர் ‘Aint nobody ****in with my music’ என்ற பெயரில் இசை - வீடியோ ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். யூ-ட்யூபில் வெளியாகியிருக்கும் இந்த ஆல்பம் படு ஆபாசமாக உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன. இது சம்பந்தமாக சென்னை மணலியைச் சேர்ந்த ஜெபதஸ் பாண்டியன் என்பவர் சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில்,

"பிரபல இசையமைப்பாளர் அனிருத் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘Aint nobody ****in with my music’ என்ற மியூசிக் வீடியோ படு மோசமாகவும் பெண்களை அவமதிக்கும் வகையிலும் உள்ளது. அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ள பாடல் வரிகள் மிக வக்கிரமாகவும், சமூக விரோதமாகவும் உள்ளன! இதுபோன்ற வீடியோக்களை, பாடல்களை அனுமதிப்பது சமூக அமைதியை, ஒழுங்கை சீர்குலைக்கும் செயலாகும். குறிப்பாக பெண்களின் தாய்மையைக் கூட கேவலமாக சித்தரித்துள்ள இந்த வீடியோ, பெண்களை புனிதமாகக் கருதும் இந்த நாட்டில் பல மோசமான விளைவுகளுக்கு அடிகோலும். எனவே சினிமாடோகிராஃப் சட்டம் 1957-ன் படி இந்த வீடியோவை வெளியிட்டதற்காக அனிருத் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கெனவே, ஒரு படத்திற்கு இசை அமைத்து தருவதாக சொல்லி அட்வான்ஸ் வாங்கிய அனிருத் ஒப்பந்தப்படி அந்தப் படத்திற்கு இசை அமைத்து கொடுக்காததால் அந்த படத்தின் தயாரிப்பாளர் அனிருத் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்திருக்கிறார். இந்நிலையில் அனிருத் மீது மற்றொரு புகார் வந்திருப்பது கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;