சீனியர்களுக்கு ஜோடியாகும் இஷா தல்வார்!

சீனியர்களுக்கு ஜோடியாகும் இஷா தல்வார்!

செய்திகள் 20-Jan-2014 3:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் திரைக்கு வந்த 'தில்லு முல்லு’ படத்தில் சிவாவுக்கு ஜோடியாக நடித்தவர் இஷா தல்வார்! ‘தட்டத்தின் மறயத்து’ மலையாள படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இந்த மும்பை அழகிக்கு ‘தில்லு முல்லு’ கை கொடுக்காத நிலையில், திரும்பவும் மலையாள படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். ஆரம்பத்தில் இளம் நடிகர்களுடன் கை கோர்த்து நடித்த இஷா தற்போது சீனியர் நடிகர்களுடன் இணைந்து டூயட் ஆடிப் பாட ஆரம்பித்திருக்கிறர். ‘பால்யகால சகி’ படத்தில் மம்முட்டியுடன் கை கோர்த்து நடிக்கும் அம்மணி, அடுத்து ஜெயராம் ஜோடியாக ‘உற்சாக கமிட்டி’ என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். விஞ்ஞானி ஆக வேண்டும் என்ற கனவோடு பல ஆராய்ச்சிகளில் ஈடுபடும் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஒரு கிராமத்து இளைஞனின் கதையச் சொல்லும் இந்தப் படத்தில் அந்த கிராமத்து இளைஞராக ஜெயராம் நடிக்க, அவருக்கு மறைமுகமாக இருந்து உதவும் பெண்ணாக இஷா நடிக்கிறார். இந்தப் படத்தை அக்கு அக்பர் இயக்குகிறார். ஜெயராம் – அக்கு அக்பர் ஏற்கெனவே இணைந்து ‘வெறுதெ அல்ல பாரியா’, ‘பாரியா அத்ர போரா’ பொன்ற வெற்றிப் படங்களை கொடுத்த கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;