சரித்திரம் படைத்த படம்!

சரித்திரம் படைத்த படம்!

செய்திகள் 20-Jan-2014 2:43 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜித்து ஜோசஃப் இயக்கத்தில், மோகன்லால், மீனா ஜோடியாக நடித்து சமீபத்தில் வெளியான மலையாள படம் ‘திருசியம்’. மலையாளத்தில் இதற்கு முன் வெளியாகி வசூலில் சாதனை படைத்த படங்கள் ’டொன்டி டொன்டி’, ‘பழசிராஜா’ ஆகியவை! 85 ஆண்டுகால மலையாள சினிமா சரித்திரத்தில் இப்போது அந்த சாதனையை ‘திருசியம்’ முறியடித்துள்ளது! ’டொன்டி டொன்டி’ திரைப்படம் 120 நாட்கள் ஓடி வசூல் செய்த தொகையை ‘திருசியம்’ 30 நாட்களில் ஈட்டியுள்ளதாம்! மோகன்லால் நடித்த சமீபகால படங்களில் மிகக் குறைந்த பட்ஜெட்டில் அதாவது, 4 கோடி ரூபாய் செலவில் உருவான படமாம் ‘திருசியம்’. இப்படத்தின் சாட்லைட் உரிமை மட்டும் 6 கோடி 50 லட்சத்திற்கு விலை போயுள்ளதாம்! இது தவிர ரீ-மேக் உரிமைக்கான விலை, மொத்த கலெக்‌ஷன் என்ற கணக்கை வைத்து ‘திருசியம்’ வெளியான ஒரு மாத காலத்தில் 20 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் வெளியான நாளிலிருந்து எல்லா தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்க, இப்படம் இன்னும் பல கோடிகளை வசூல் செய்யும் என்கின்றனர் விவரம் தெரிந்த சில மோலிவுட் வல்லுனர்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;