ரஜினிக்கு விருந்து அளித்த மோகன்லால்!

ரஜினிக்கு விருந்து அளித்த மோகன்லால்!

செய்திகள் 20-Jan-2014 1:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவில் 80-களில் கொடிக்கட்டி பறந்த நடிகர் - நடிகைகள் ஒவ்வொரு வருடமும் ஏதாவது ஒரு நாளில் பார்ட்டி வைத்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்வது வழக்கம்! இந்த வழக்கத்தை முதன் முதலாக சென்னையில் துவக்கி வைத்தவர் லிசி பிரியதர்ஷன் தான்! இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், மோகன்லால், சிரஞ்சீவி, அம்பரீஷ், ரமேஷ் அரவிந்த், மோகன், அர்ஜுன், நடிகைகள் ராதிகா, குஷ்பு, சுகாசினி, அம்பிகா என பல தென்னிந்திய ஹீரோ – ஹீரோயின்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த வருடம் நடிகர் அம்பரீஷ் பெங்களூரில் இந்த சந்திப்பை நடத்தினார். இந்த பார்ட்டியில் ரஜினிகாந்த உட்பட தென்னிந்தியாவின் பல முன்னணி நடிகர் - நடிகைகள் கலந்துகொண்டனர்!

இந்த வருடம் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் கொச்சியில் நேற்று முன்தினம் விருந்து வைத்தார்! இந்த விருந்தில் நடிகரகள் சிரஞ்சீவி, மோகன், வெங்கடேஷ், சுமன், ரமேஷ் அரவிந்த், அம்பரீஷ், நடிகைகள் சுமலதா, அம்பிகா, ராதா, ரம்யா கிருஷ்ணன், சரிதா, லிசி, ராதிகா உட்பட பல தென்னிந்திய பிரபலங்கள் கலந்துகொள்ள, சர்ப்ரைஸ் விசிட்டராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் கலந்துகொண்டு பார்ட்டியை கலகலக்க வைத்தார்.

மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளியான ‘திருசியம்’ மலையாள படம் வசூலில் சாதனை படைத்து ஓடிக்கொண்டிருப்பதோடு, அவர் விஜய்யுடன் நடித்த ‘ஜில்லா’ படமும் கேரளாவில் நல்ல வசூலை தந்து ஓடிக்கொண்டிருப்பதால் மோகன்லால் அளித்த இந்த விருந்து அமர்க்களப்பட்டதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;