அப்பாவைப் பற்றி தனுஷ்!

அப்பாவைப் பற்றி தனுஷ்!

செய்திகள் 20-Jan-2014 12:32 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஆர்.கே. புரொடக்ஷன்ஸ் பிரைவெட் லிமிடெட் பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘காசு பணம் துட்டு’. இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
விழாவில் நடிகர் தனுஷ் மற்றும் ஒளிப்பதிவாளர் மதுஅம்பாட் , இயக்குனர்கள் செல்வராகவன், ‘எங்கேயும் எப்போதும்’ சரவணன், துரைசெந்தில்குமார், பொன்ராம் ஐஸ்வர்யா தனுஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். விழாவில் படத்தின் இயக்குனர் கஸ்தூரிராஜா பேசும்பொது,

‘‘என் மகன்கள் இப்போது சினிமாவில் நல்ல நிலமையில் இருக்கிறார்கள். அவர்கள் என்னை நீ ஏன் இவ்வளவு கஷ்டப்படுகிறாய் என்கிறார்கள்! அம்மாவுடன் சுவிட்சர்லாந்து, லண்டன் என்று ஜாலியாக சுற்றுலா போக வேண்டியதுதானே என்கிறார்கள். ஆனால் எனக்கு எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். நான் இப்போது ஒரு புதுமுக இயக்குனராகி இருக்கிறேன்.

இன்று உள்ள புதுமுக இயக்குனர்களை பார்த்து பிரமிக்கிறேன். அவர்கள் அமைத்த பாதையில் பயணம் செய்ய விரும்புகிறேன். நான் சினிமாவிற்கு வந்தபோது என் கையில் ஒரு புனித நூலும், முதுகில் என் குடும்ப சுமையும் இருந்தது. குடும்பத்தை நல்ல இடத்தில் சேர்க்கும்போது புனித நூலை தொலைத்து விட்டேன். அதை தேடும் முயற்சியில் இப்போது இருக்கிறேன்.

கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் படத்திற்காக உழைத்துக் கொண்டிருக்கிறேன் கதாபாத்திரங்களுக்கு ஏற்ப நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் என்னை தவிர அனைவரும் புதுமுகங்கள்’’ என்றார்.

அதன் பிறகு பேசிய நடிகர் தனுஷ், ‘‘இதுவரை அப்பா இயக்கிய படங்களில் நான் கலந்து கொள்ளும் முதல் இசை வெளியீட்டு விழா இதுதான். இந்தப் படத்தில் என்னை ஒரு பாடல் பாடும் படி கேட்டார் ஆனால் நேரம் இல்லாத காரணத்தால் பாட முடியவில்லை. அப்பா தொலைத்த புனித நூலை நானும் அண்ணனும் எடுத்துக்கொண்டு பெரியாளாகி விட்டோம். இனி அப்பா அம்மாவுடன் வெளிநாடுகளுக்கு சுற்றுலா போகும் படி கேட்டுக்கொள்கிறேன். மற்றும் உங்கள் படத்தில் தமிழ் பாடகர்களை அறிமுகப்படுத்துமாறும் கேட்டுக்கொள்கிறேன்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரும்புத்திரை - யார் இவன் ஆடியோ பாடல்


;