நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம்!

நஸ்ரியாவுக்கு ஆகஸ்ட்டில் திருமணம்!

செய்திகள் 20-Jan-2014 11:22 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாள சினிமாவின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஃபஹத் ஃபாசில். பிரபல இயக்குனர் ஃபாசிலின் மகனான இவர் தற்போது அஞ்சலி மேனன் இயக்கி வரும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ஃபஹத்துக்கு ஜோடியாக நடிப்பவர் நஸ்ரியா நசீம். இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு நடிக்கும்போது ஃபஹத் – நஸ்ரியா இருவருக்கிடையே காதல் மலர்ந்துள்ளது. இவர்களது காதல் விவகாரம் சமீபத்தில் இரு வீட்டாருக்கும் தெரிய வந்திருக்கிறது. இந்நிலையில் ஃபஹத்தின் பெற்றோர்களும் நஸ்ரியாவின் பெற்றோர்களும் சந்தித்துப் பேசி இருவருக்கும் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளனர். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த இவர்களது திருமணம் இஸ்லாம் மத முறைப்படி வருகிற ஆகஸ்ட் மாதம் கேரளாவில் நடைபெறவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ரிச்சி - டீசர்


;