முருகதாஸ் தம்பியின் அடுத்த படம்!

முருகதாஸ் தம்பியின் அடுத்த படம்!

செய்திகள் 20-Jan-2014 10:57 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஸ்ரீலஷ்மி ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் எம்.தியாகு வழங்கும் படம் ‘குத்தூசி’. இந்தப் படத்தில் கதையின் நாயகனாக ’வத்திக்குச்சி’ படத்தில் நடித்த திலீபன் நடிக்கிறார். இவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. அறிமுக இயக்குனர் சிவசக்தி இயக்கும் இந்தப் படத்திறகு கண்ணன் இசை அமைக்க, எஸ்.செல்வகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் அண்ணாமலை பாடல்களை எழுத, வீருசரண் வசனம் எழுதுகிறார். ‘வத்திக்குச்சி’ படத்திற்குப் பிறகு திலீபன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்திற்கான கதாநாகி இன்னும் முடிவாகவில்லை. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் ஆரம்பமானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;