ராபர்ட் – வனிதா திருமணமா?

ராபர்ட் – வனிதா திருமணமா?

செய்திகள் 20-Jan-2014 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் விஜயகுமார் – மறைந்த நடிகை மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா விஜயகுமார். ‘சந்திரலேகா’, ‘மாணிக்கம்’ என பல படங்களில் நடித்துள்ள இவர் ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஸ்ரீஹரி என்ற மகன் உள்ளார். இந்நிலையில் ஆகாஷுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டு அவரைப் பிரிந்து வாழ்ந்து வந்த வனிதா விஜயகுமார் இரண்டாவதாக ஆனந்தராஜ் என்பவரை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். சில வருடங்கள் அவருடன் வாழ்ந்து வந்த வனிதா அவரையும் விவாகரத்து செய்தார்.

இந்நிலையில் நடிகை அல்போன்சாவின் தம்பியும், நடன இயக்குனருமான ராபர்ட்டை வனிதா மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை வனிதா மறுத்துள்ளார். இது குறித்து வனிதாவும், ராபர்ட்டும் இணைந்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

‘‘நாங்கள் இருவரும் நண்பர்களாக பழகி வருகிறோம். இது எங்கள் இரு வீட்டாருக்கும் தெரியும். விரைவில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கி திரைப் படங்களை தயாரிக்க உள்ளோம். அதற்கான பணிகள் தற்போது நடந்து வருகிறது. நாங்கள் இப்போது திருமணம் செய்யவில்லை. ஆனால் இது பற்றி விரைவில் அறிவிப்போம்’’ என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விடியும் வரை விண்மீன்களாவோம் - டிரைலர்


;