விஜய்யை புண்படுத்திய ரசிகர்!

விஜய்யை புண்படுத்திய ரசிகர்!

செய்திகள் 18-Jan-2014 4:04 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இணையதளம் மூலம் வெவ்வேறு நடிகர்களின் ரசிகர்கள் மோதிக் கொள்வது இப்போது வாடிக்கையான ஒன்றாகி விட்டது! இதற்கு சமீபத்திய உதாரணம் டுவிட்டரில் நடிகர் விஜய்யை ஒரு ரசிகர் திட்டியது! இதுபோன்ற சம்பவங்களை ரசிகர்கள் தவிர்க்க வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த போக்கு ஆரோக்கியமானது இல்லை என்றும் அவர் கூறி உள்ளார்.

சமீபத்தில் ரசிகர்களுடன் டுவிட்டர் இணைய தளம் மூலம் கலந்துரையாடினார் விஜய்.அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதில் அளித்தார் விஜய். அத்துடன் ரசிகர்கள் தங்கள் வேலையையும் குடும்பத்தினரையும் நன்றாக பார்த்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுரை சொன்னார் விஜய். அப்போது ஒரு ரசிகர் குறுக்கிட்டு விஜய்யை அவதூறாக திட்டினார். இதனால் விஜய்யும் அவரது ரசிகர்களும் அதிர்ச்சியானார்கள். அதனை தொடர்ந்து விஜய் ரசிகர் மன்றத்தினர் களத்தில் இறங்கி டுவிட்டரில் விஜய்யை அவதூறாக பேசியவரை கண்டுபிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க தயாரானார்கள். இது பற்றிய தகவல் விஜய்க்கு தெரிந்ததும் அந்த வாலிபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்றும் விட்டு விடும்படியும் கேட்டுக் கொண்டார். இதனை தொடர்ந்து அந்த வாலிபர் விடுவிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக விஜய் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையை உங்கள் பார்வைக்காக கீழே தரப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் அறிக்கை:

நாள் ஜன17,2014:

அனைவருக்கும் வணக்கம், நான் இந்த அறிக்கை கடிதத்தை ஒரு நடிகனாக உங்கள் முன் வைக்கவில்லை.உங்களின் சகோதரனாக,நண்பனாக முன் வைக்கிறேன்.

நேற்று உங்களிடம் பேசுவதற்காக சமுக வலைதளத்திற்க்கு வந்திருந்தேன்.ஆனால் ஒரு சிலர் பேசிய வார்த்தைகள் என்னை மட்டும் அல்லாமல் சம்பந்தப்பட்ட என் நண்பரான அந்த நடிகரையும் கஷ்டப்படுத்தியது என்பது மறுக்கமுடியாத உண்மை.தகவல் அறிந்த என் நண்பரான அந்த நடிகர் உடனடியாக போனில் தொடர்புகொண்டு நீண்ட நேரம் பேசினார்.நாங்கள் எப்போதும் நல்ல நண்பர்களாகதான் இருக்கின்றோம்.அது போல் நீங்களும் இருக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய ஆசையும்.நேற்று சம்பந்தபட்ட அந்த நபரின் புகைப்படம் சமுக வலைதளஙகளில் பரவுவதாக கேள்விப்பட்டேன்.இது ஒரு தனி நபருக்கு எதிரான செயல் ஆகும்.இதை அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும்,ஏற்கனவே பகிர்ந்தவர்கள் அதை நீக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.அந்த நபர் ரசிகர்களால் காவல்துறையில் ஒப்படைக்கப்பட்டார் எனவும் அறிந்தேன்.இதெல்லாம் தேவை இல்லாத செயல் மற்றும் இது போல் இனி என் ரசிகர்கள் மட்டும் அல்ல எந்த ஒரு நடிகனின் ரசிகனும் ஈடுபட கூடாது.காவல் துறையில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்படவும் கேட்டுக்கொண்டேன்.அவர் மீது எந்த ஒரு புகாரும் பதிவாகவில்லை.ஒரு நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் கையில் உள்ளது.அதை தகாத செயல்களில் ஈடுபட்டு உங்கள் வாழ்கையை கெடுத்துக்கொள்ளாதீர்கள்.உங்களை தோல்களில் தூக்கி வளர்த்த பெற்றோர்களை முதல் கடவுளாக வணங்குங்கள்.அடுத்ததாக உங்கள் வாழ்க்கையை கவனியுங்கள்.

இதை எல்லாம் தனிப்பட்ட நடிகனாக தெரிவிக்கவில்லை அனைவரின் சகோதரன் மற்றும் நண்பனாக தெரிவிக்கிறேன்

நன்றி - உங்கள் விஜய்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;