‘டாப் 10’ நடிகர்களுக்கு சலுகை இல்லை!

‘டாப் 10’ நடிகர்களுக்கு சலுகை இல்லை!

செய்திகள் 18-Jan-2014 3:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட டாப் 10 வரிசையில் இடம் பெற்றிருக்கும் நடிகர்களின் படங்களுக்கு இனிமேல் வரிவிலக்கு இல்லை என அரசு முடிவு எடுத்து உள்ளதாம்! பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே பலகோடிகளில் தான் தயாரிக்கப்பட்டு வருகிறது.

மேலும் அதன் லாபமும் பல கோடிகளில் வசூலாவதால் அரசாங்கம் கொடுக்கும் 30 சதவீத வரிவிலக்கு மேலும் லாபமாக கிடைப்பதால் இனி சிறுமுதலீடு கொண்டு தயாரிக்கும் படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு என அரசு முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.அடுத்து வெளிவர இருக்கும் 'கோச்சடையான்', 'விஸ்வரூபம்', 'ஐ', போன்ற பல படங்களுக்கு இனி வரிச்சலுகை கிடையாது. பொங்கலுக்கு வெளியான 'வீரம்' மற்றும் 'ஜில்லா' ஆகிய படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஸ்கெட்ச் - டீசர்


;