மகனை இயக்கும் அப்பா!

மகனை இயக்கும் அப்பா!

செய்திகள் 18-Jan-2014 3:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘மனுநீதி’, ‘இந்திரலோகத்தில் நா.அழகப்பன்’ ஆகிய படங்களை இயக்கியவர் தம்பி ராமையா. இந்தப் படங்களை தொடர்ந்து ‘ஒரு கூடை முத்தம்’ என்ற படத்தையும் இயக்கியிருக்கும் தம்பி ராமையா காமெடி ,மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்தும் வருகிறார். ‘மைனா’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த குணச்சித்திர நடிகருக்கான தேசிய விருது பெற்ற இவர் அடுத்து தனது மகன் உமாபதியை ஹீரோவாக அறிமுகப்படுத்தி ஒரு படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்திற்கு ‘வரலாறு முக்கியம் மாப்ளே’ என்று பெயர் வைத்துள்ளார். இந்தப் படத்திற்கான கதாநாயகி வேட்டை தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;