இணையும் தனுஷ் – சிம்பு!

இணையும் தனுஷ் – சிம்பு!

செய்திகள் 18-Jan-2014 1:14 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு நடிக்கும் ‘வாலு’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இது சம்பந்தமான செய்தியை நேற்று வெளியிட்டிருந்தோம். ‘வாலு’க்கு போட்டியாக காதலர் தினத்தன்று தனுஷ் நடிக்கும் ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தின் ஆடியோவையும் வெளியிட இருக்கிறார்கள்! ‘வாலு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, தமன் இசை அமைக்கிறார்.

‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷுக்கு ஜோடியாக அமலா பால் நடிக்க, அனிருத் இசை அமைக்கிறார். தனுஷின் 25-ஆவது படமான, ‘வேலையில்லா பட்டதாரி’யை ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இயக்குகிறார். ‘வாலு’ படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே-1ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் ’தல’யின் ரசிகரான சிம்பு! ‘வேலையில்லா பட்டதாரி’ பட ரிலீஸ் தேதி இன்னும் முடிவாகவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;