ஒரே மேடையில் சல்மான் - ஷாருக்!

ஒரே மேடையில் சல்மான் - ஷாருக்!

செய்திகள் 18-Jan-2014 12:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டை பொறுத்தவரையில் சல்மான் கானும், ஷாருக்கானும் ஒரு மேடையில் ஒன்றாக தோன்றினால் அது பெரிய ஒரு விஷயம்தான்! ஏன் என்றால் கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் இருவரும் எதிரும் புதிருமாக இருந்தவர்கள்! இந்நிலையில் சென்ற ஆண்டு நடந்த ஒரு இஃப்தார் விருந்தில் சந்தித்துக்கொண்ட இந்த இரண்டு பிரபலங்களும் கட்டிப்பிடித்து தங்களுக்கிடையிலான பிணக்கை மாற்றிக்கொண்டனர்! அப்போது, ‘இவர்களது இந்த நட்பு எல்லாம் எத்தனை நாளைக்கு…?’ என்று கேலி செய்த சில பாலிவுட் பிரபலங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சமீபத்தில் மும்பையில் நடந்த ஸ்டார் கில்ட் விருது வழங்கும் விழாவில் சல்மான் கானும், ஷாருக்கானும் மீண்டும் கட்டிப்பிடித்து ‘நாங்கள் நல்ல நண்பர்கள்’ என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளனர்.

ஸ்டார் கில்ட் விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவர் சல்மான் கான். சென்ற ஆண்டின் ’சிறந்த என்டர்டெய்னர்’ விருது ஷாருக்கானுக்கு வழங்கப்பட்டது. இந்த விருதை வாங்க மேடைக்கு வந்த ஷாருக்கான், ‘‘இந்திய சினிமாவின் மிகச் சிறந்த ஒரு என்டர்டெய்னரான சல்மான் கானுடன் இந்த விருதை வாங்கியதில் ரொம்பவும் சந்தோஷப்படுகிறேன்’’ என்று பேச, அதற்கு பதிலளித்தவாறு சல்மான் கான், ‘‘ஷாருக் நடித்த, ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ ஹிட் ஆனதில் நான் ரொம்பவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்றவாறே, தான் நடித்துள்ள ‘ஜெய்ஹோ’ படத்தை புரொமோட் செய்யும் விதமாக ஷாருக்கானிடம் மேடையில் ‘ஜெய் ஹோ’ என்று கூறச் சொல்ல, உடனே ஷாருக்கான் மைக்கை பிடித்து ‘ஜெய் ஹோ…’ என்று கூறியதும் அரங்கமே அதிரந்தது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;