விஷ்ணுவின் கிரிக்கெட் படம்!

விஷ்ணுவின் கிரிக்கெட் படம்!

செய்திகள் 18-Jan-2014 11:46 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

'வெண்ணிலா கபடிக்குழு' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர்கள் இயக்குனர் சுசீந்திரன் - நடிகர் விஷ்ணு. இந்தப் படத்தை தொடர்ந்து, ‘நான் மகான் அல்ல’, ‘ராஜாபாட்டை’ என பல படங்களை இயக்கினார் சுசீந்திரன். அது மாதிரி விஷ்ணுவும் ‘குள்ளநரிக்கூட்டம்’, ‘நீர்ப்பறவை’ என பல படங்களில் நடித்தார். இப்போது இவர்கள் மீண்டும் ஒரு படத்தில் இணைகின்றனர். ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தில் கபடி விளையாட்டை வைத்து திரைக்கதை அமைத்த, சுசீந்திரன் அடுத்து இயக்கும் படத்தில் கிரிக்கெட்டெ கதைக் களமாக வைத்திருக்கிறார்.

‘வீர் திர சூரன்’ என்ற பெயரில் சுசீந்திரன் ஒரு படத்தை இயக்கவிருந்தார். இப்போது அந்தப் படம்தான் பெயர் மாற்றத்துடன் விஷ்ணு நடிப்பில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நிஜத்தில் கிரிக்கெட் விளையாட்டு வீரரான விஷ்ணுவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்க, யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இவன் யாரென்று தெரிகிறதா - வீடியோ


;