தேவாவுடன் அனிருத் கூட்டணி!

தேவாவுடன் அனிருத் கூட்டணி!

செய்திகள் 18-Jan-2014 11:20 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

திருக்குமரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஹன்சிகா மோத்வானி நடிக்கும் படம் 'மான் கராத்தே'. இப்படத்திற்காக ஒரு கானா பாடலை உருவாக்கியுள்ளார் படத்தின் இசையமைப்பாளர் அனிருத். இந்தப் பாடலை பாட, வித்தியாசமான குரலைத் தேடிய அனிருத்துக்கு உடனே நினைவுக்கு வந்தவர் இசையமைப்பாளர் தேவா! 'மனசுக்கேத்த மகராசா' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான இவர் கானா பாடல்களில் கொகட்டி பறந்தவர். அவரைப்பற்றி அனிருத் கூறும்போது,

‘‘நிறைய சூப்பர்ஹிட் கானா பாடல்களைக் கொடுத்தவர் தேவா. அவருடைய பாடல்களை கேட்கும் போது ஒரு எனர்ஜி கிடைக்கும். அவரை தொடர்பு கொண்டு விருப்பம் தெரிவித்தபோது உடனே சம்மதிக்கவே, அவரை பாட வைத்தேன். படத்தின் கிளைமாக்ஸில் இடம் பெறும் இப்பாடல் இந்த வருஷத்தின் சூப்பர்ஹிட் பாடலாக அமையும்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தானா சேர்ந்த கூட்டம் - சொடக்கு பாடல் டீசர்


;