இவர் யாரென்று தெரிகிறதா?

இவர் யாரென்று தெரிகிறதா?

செய்திகள் 18-Jan-2014 11:07 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

இதுவரை வழக்கமான கேரக்டர்களில் நடித்து வந்த ஜெயராம், கமல் இயக்கிய ‘நடன்’ என்ற மலையாள படத்தை தொடர்ந்து மாறுபட்ட கெட்-அப்களில் தோன்றி நடிக்க துவங்கியிருக்கிறார். சமீபத்தில் வெளியான ‘நடன்’ திரைப்படம் வணிகரீதியாக வெற்றிபெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக பேசப்பட்ட படமாகும். அந்த வரிசையில் ஜெயராம் தற்போது நடித்து வரும் படம் ‘சொபானம்’. இந்தப் படத்தில் செண்டை மேள கலைஞர் உன்னி மாரார் என்ற கேரக்டரில் நடித்து வரும் ஜெயராமின் வித்தியாசமான கெட்-அப் தான் தற்போது மோலிவுட்டின் ஹாட் டாபிக்!

இந்தப் படத்தில் ஜெயராமுக்கு ஜோடியாக பிரபல ஒடிசி நடன கலைஞர் காதம்பரி நடிக்கிறார். இவர்களுடன் வினீத், லட்சுமி கோபாலசாமி, சித்திக் ஆகியோரும் நடிக்கிறார்கள். இந்தப் படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி என்.கருண் இயக்குகிறார். இவர் தேசிய அளவிலும், உலக அளவிலும் பல விருதுகளை பெற்ற இயக்குனராவார்.



உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

செண்பக கோட்டை - டிரைலர்


;