‘ராம்லீலா’வை ரீ-மேக் செய்ய வேண்டும்!

‘ராம்லீலா’வை ரீ-மேக் செய்ய வேண்டும்!

செய்திகள் 18-Jan-2014 11:01 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தெலுங்கில் நானி, நித்யாமேனன் நடித்து வெற்றி பெற்ற படம் ’அல மொதலைந்தி’. இப்படம் தமிழில் கௌதம் கார்த்திக், ரகுல் ப்ரித்தி, நிகிஷாபடேல் நடிப்பில் ' என்னமோ ஏதோ' என்ற பெயரில் வெளிவருகிறது. இந்தப் படத்தை 30 வருடங்களுக்கு மேலாக அவுட்டோர் யூனிட்டில் புகழ்பெற்று விளங்கி வரும் ரவிபிரசாத் அவுட்டோர் யூனிட் நிறுவனம் முதன் முதலாக தயாரித்துள்ளது. ப்ரியதர்ஷனிடம் உதவி இயக்குனராக இருந்த ரவி தியாகராஜன் இப்படத்தை இயக்குகிறார். இவர் 3000 படங்களுக்கு மேல் பல இந்திய மொழிப் படங்களுக்கு சண்டை பயிற்சி அளித்த தியாகராஜனின் மகன் ஆவார்.

இப்படத்தின் ஆடியோ வெளியீடு நேற்று மாலை சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது. ஆடியோவை நடிகர் கார்த்திக் வெளியிட, ரவிபிரசாத் நிறுவனத்தின் அதிபர் சங்கைய்யாவின் மனைவி சரோஜனம்மா உட்பட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர். விழாவில் கலந்துகொண்ட ‘ஸ்டுடியோகிரீன்’ ஞானவேல் ராஜா பேசும்போது,

‘‘இங்கு ‘சிவஸ்ரீ பிக்சர்ஸ்’ சீனிவாசன் பேசும்போது முத்துராமன், கார்த்திக் அடுத்து கௌதம் கார்த்திக் உடன் படம் பண்ணவேண்டும் என விருப்பம் தெரிவித்தார். 'ராம் லீலா' ஹிந்திப் படம் பார்த்தபோது அந்தப் படத்தை ரீ-மேக் பண்ணினால் அதற்கு ஏற்ற ஹீரோ யார் என்ற குழப்பத்தில் இருந்தேன். ஆனால், ' என்னமோ ஏதோ ' படத்தோட பாடல்கள், ட்ரைலர் பார்த்தபோது அந்தப் படத்திற்கு கௌதம் கார்த்திக் மிகச்சரியாக இருப்பார் என்று எனக்குப் பட்டது. அவ்வளவு எனர்ஜி அவரிடம் இருக்கு. 'ராம்லீலா' படத்தோட ஹீரோவை விட எனர்ஜியா இருக்கார். ‘சிவஸ்ரீ பிக்சர்ஸ்’ சீனிவாசன் அந்தப் படத்தை பார்த்து கௌதம் கார்த்திக்கை வைத்து ரீ-மேக் செய்யவேண்டும். 'அலமொதலைந்தி' தெலுங்கில் ஹிட்டான படம். இங்கேயும் இப்படம் பெரிய ஹிட்டாகும். படம் யூத்ஃபுல்லா இருக்கு. கேமரா ஒர்க் ரொம்ப நல்லாயிருக்கு. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;