’ஆஹா கல்யாண’த்தில் பஞ்ச் பாடல்!

’ஆஹா கல்யாண’த்தில் பஞ்ச் பாடல்!

செய்திகள் 17-Jan-2014 5:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தரமான பல 'காதல்' படங்கள் மூலம் இந்திய திரை படங்களுக்கு சர்வதேச அளவில் பெயர் வாங்கி தந்த ‘யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ்’ பட நிறுவனம் முதல் முறையாக தமிழில் தயாரித்துள்ள படம் ‘ஆஹா கல்யாணம்’. இந்தப் படத்தில் நானி, வாணி கபூர் நடிக்க, அறிமுக இயக்குனர் கோகுல் கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். விரைவில் வெளியாக இருக்கும் 'ஆஹா கல்யாணம்' படத்தின் ஆடியோ வெளியீடு வருகிற 21-ஆம் தேதி நடக்க உள்ளது. அதன் முன்னோட்டமாக இந்த படத்தின் சிங்கிள் டிராக் இன்று மாலை 5 மணி முதல் ரேடியோ மிர்ச்சி வானொலியில் ஒலிபரப்பாக உள்ளது.

தரணின் இசையில் அமைந்துள்ள சிங்கிள் டிராக் தங்களது அபிமான நடிகர்கள் மேல் உள்ள பேரன்பினால் பிரிந்து கிடக்கும் ரசிகர்கள் எல்லோரும் ரசிக்க தக்க வகையில் வரவேற்கும் பாடலாக அமைந்துள்ளது. பிரபல தமிழ் நடிகர்களின் பிரபலமான பஞ்ச் வசனங்களை மையமாக வைத்து எழுதப்பட்ட இப்பாடலை ‘பஞ்ச் பாடல்’ என்று அழைக்கப்படுகிறது. மதன் கார்க்கி இயற்றியுள்ள இப்பாடல் உலக அளவில் பிரசித்தி பெறும் என்கிறார்கள் இப்படக் குழுவினர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;