‘தல’ பிறந்த நாளில் வாலு!

‘தல’ பிறந்த நாளில் வாலு!

செய்திகள் 17-Jan-2014 5:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர் சிம்பு, ‘தல’ அஜித்தின் பரம ரசிகர் என்பது எல்லோருக்கும் தெரியும். இதை தனிப்பட்ட முறையிலும், தான் நடிக்கும் பல படங்களின் மூலமாகவும் சிம்பு வெளிப்படுத்தியிருக்கிறார். சிம்பு தற்போது நடித்து வரும் படங்களில், ’வாலு’ குறிப்பிடத்தக்கது. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஹன்சிகா மோத்வானி நடிக்க, இவர்களுடன் சந்தானம், விடிவி கணேஷ் ஆகியோரும் நடிக்கிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்த இந்தப் படத்தின் ஆடியோவை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட, படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1-ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு, இப்போது அதற்கான வேலைகளில் படு பிசியாக இயங்கி வருகிறார் சிம்பு!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;