10 ஆஸ்கரை வெல்லுமா கிராவிட்டி?

10 ஆஸ்கரை வெல்லுமா கிராவிட்டி?

செய்திகள் 17-Jan-2014 3:54 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

உலக அளவில் மதிக்கப்படும் பெரிய சினிமா விருது ஆஸ்கர் விருது! 86-ஆவது ஆஸ்கார் விருது வழங்கும் விழா வருகிற மார்ச் மாதம் 2-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. ஆஸ்கர் விருதுகளுக்கான பரிந்துரை பட்டியலை பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் மற்றும் ‘அகாடமி ஆஃப் மோஷன் பிக்சர்ஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயன்ஸ்’ அமைப்பின் தலைவர் செரில் பூன் ஐசக்ஸ் ஆகியோர் இணைந்து வெளியிட்டுள்ளனர்.

இந்த வருடத்தின் ஆஸ்கர் விருதுக்கான போட்டியில் உலகளவில் பெரும் வரவேற்பை பெற்று இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் ‘கிராவிட்டி’ திரைப்படம், மற்றும் ‘அமெரிக்கன் ஹசில்’ ஆகிய இரண்டு படங்கள் முன்னணியில் இருக்கிறது. இந்த இரண்டு படங்களும் சிறந்த படம் உட்பட 10 பிரிவுகளில் போட்டியிடுவதற்காக தேர்வாகியுள்ளது. இதற்கடுத்த படியாக ‘12 இயேர்ஸ் ஏ ஸ்லேவ்’ என்ற படத்துக்கு 9 நோமினேஷன் கிடைத்துள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;