ஜனவரி 31-ல் ‘ரம்மி’ ஆட்டம்!

ஜனவரி 31-ல் ‘ரம்மி’ ஆட்டம்!

செய்திகள் 17-Jan-2014 2:27 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற வருடம், ‘சூது கவ்வும்’, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ என இரண்டு வெற்றிப் படங்களை தந்த விஜய் சேதுபதி நடித்து அடுத்து ரிலீசாகவிருக்கும் படம், ‘ரம்மி’. விஜய் சேதுபதியுடன் இனிகோ பிரபாகரன், காயத்ரி, ஐஸ்வர்யா மற்றும் பலர் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஒரு கெஸ்ட் ரோலில்தான் நடித்திருக்கிறார் என்று பரவலாக பேசப்பட்டது! ஆனால் இதை மறுத்துள்ளார் இந்தப் படத்தை வாங்கி வினியோகம் செய்யும் ‘ஜே.எஸ்.கே.ஃபிலிம் கார்பரேஷன்’ அதிபர் சதீஷ் குமார். அவர் இது குறித்து கூறும்பொது, ‘‘விஜய் சேதுபதி ‘ரம்மி’யில் ஒரு சில காட்சிகளில் தான் வருவார் என்று கூறப்படுவதில் உண்மை இல்லை! அவருக்கு படம் முழுக்க வருவதுமாதிரியான கேரக்டர்தான்’’ என்றார்! ஸ்ரீவள்ளி ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தை பாலகிருஷ்ணன் இயக்கியிருக்கிறார். இப்படம் வருகிற 31-ஆம் தேதி திரைக்கு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

திருடன் போலீஸ் - 'என்னோடு வா' வீடியோ சாங்


;