விஜய் + அட்லி கூட்டணி?

 விஜய் + அட்லி கூட்டணி?

செய்திகள் 17-Jan-2014 12:52 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ராஜா ராணி’யின் வெற்றியை தொடரந்து அடுத்து அட்லீ இயக்கும் படம் என்ன? யார் அதில் ஹீரோவாக நடிக்கப் போகிறார் என்ற கேள்வி கோலிவுட்டில் இருந்து வந்தது! இதற்கு விடை கிடைத்தது மாதிரி இன்று காலை இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ‘‘அட்லியின் அடுத்த படம் பெரிய ஹீரோவுடன்…’’ என ட்வீட் செய்திருந்தார். இதை வைத்து இணைய தளங்களில் அந்த பெரிய் ஹீரோ விஜய் என செய்திகள் ரவுண்ட் கட்டி பறக்க, உடனே சுதாரித்துக் கொண்ட ஜி.வி. பிரகாஷ், அந்த ட்வீட்டை உடனே டெலிட் செய்து ‘‘எல்லாம் நூறு சதவிகிதம் உறுதியானதும் நாங்களே அறிவிக்கிறோம்! அந்தப் படம் என் இசையில் 50-ஆவது படமாகவும் இருக்கும்’’ என அடுத்த ட்வீட்டை தட்டி விட்டார்! இந்தப் படம் ஒரு ரொமான்டிக் படமாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்! ‘ஜில்லா’வை தொடர்ந்து விஜய் அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு விஜய் தன்னுடன் நீண்ட நாட்களாக பணியாற்றி வரும் பி.டி.செல்வகுமாரை தயாரிப்பாளராக்கி ஒரு படத்தில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியிருந்தது! அட்லி இயக்கும் படம் இதுவாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரு - டிரைலர்


;