எம்.ஜி.ஆரின் குருவணக்கம்!

எம்.ஜி.ஆரின் குருவணக்கம்!

கட்டுரை 17-Jan-2014 12:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

எம்.ஜி.ஆரின் பிறந்ததினமான இன்று அவரைப் பற்றிய ஒரு சுவாரஸ்ய சம்பவம் உங்களுக்காக...

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் தன்னைப் பெற்ற தாயான சத்யபாமா அவர்களை தெய்வமாக போற்றியவர், அவர் இருக்கும் வரை அவரது தாயாரின் காலில் வணங்கிவிட்டுத்தான் முக்கிய இடங்களுக்கும், முக்கியமான பணிகளுக்கும் செல்வார்.

அப்படிப்பட்ட எம்.ஜி.ஆர், பிரபல நடிகராக, அரசியல் தலைவராக இருந்தபோது, அவரது தாயைத் தவிர வேறு இருவரின் கால்களில் விழுந்து வாழ்த்து பெற்றார் என்றால் நம்ப முடிகிறதா. அதுவும் ஆயிரக்கணக்கான பிரபலங்கள், மக்கள் திரண்டிருந்த திடலில், பலபேர் முன்னிலையில் விழுந்தார் என்பதை நம்ப முடிகிறதா... ஆனால் அதுதான் உண்மை. அதில் ஒருவர்தான் எம்.கே.ராதா.. இன்னொருவர் பிரபல இயக்குனர் சாந்தாராம்.

எம்.கே.ராதாவின் தந்தை கந்தசாமி முதலியாரின் நாடகக் கம்பெனியில் பணியாற்றியவர்களில் எம்.ஜி.ஆரும் ஒருவர். அப்போதே எம்.கே.ராதாவிடம் எம்.ஜி.ஆருக்கு மிகுந்த மரியாதையும், பாசமும் உண்டு. அவரை ‘அண்ணன்’ என்றே அழைப்பார் எம்.ஜி.ஆர். தான் முதன்முதலாக கதாநாயகனாக நடித்த ‘சதிலீலாவதி’ படத்தில் எம்.ஜி.ஆரும் முதல் வாய்ப்பு கிடைக்க முக்கிய காரணமாக இருந்தவர் எம்.கே.ராதா தான்.

1971-ல் வெளிவந்த 'ரிக்‌ஷாக்காரன்' படத்திற்கு இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்தது. இதன் வெற்றிவிழா சென்னையில் நடைபெற்றது. அவ்விழா மேடையில்தான் தன்னை வாழ்த்த வந்த தனது மானசீக குருவான எம்.கே.ராதாவின் கால்களில் விழுந்து ஆசிபெற்றார் எம்.ஜி.ஆர். அனைவரையும் ஆச்சரியத்திலும் ஆனந்த பரவசத்திலும் ஆழ்த்தியது எம்.ஜி.ஆரின் இந்த நற்பண்பு.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - தாறுமாறு பாடல் வீடியோ


;