மறைந்த பிரபல நடிகை!

மறைந்த பிரபல நடிகை!

செய்திகள் 17-Jan-2014 11:37 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தேவதாஸ்’, ‘ஆந்தி’, ‘சாத் பாகே பந்தா’ போன்ற பல ஹிந்திப் படங்களிலும், ‘அகினிபரீக்‌ஷா’’, ‘சப்தபாடி’ என ஏராளமான வங்காளா மொழிப் படங்களிலும் நடித்தவர் சுசித்ராசென். பழம் பெரும் நடிகையான இவருக்கு வயது 82. அவர் இன்று காலை கொல்கத்தாவில் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். இவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு கடந்த மாதம் 23 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவருக்கு இன்று காலை பயங்கரமான மாரடைப்பு ஏற்பட்டு, அதற்கு சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலன் அளிக்காமல் காலமானார். வட இந்திய சினிமாவில் தனக்கென்று ஒரு தனிப் பாணியை வகுத்து சிறந்த நடிகையாக விளங்கியவர் சுசித்ரா சென் என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;