விஜய் மில்டனை அசிங்கப்படுத்திய அறிமுக நடிகை!

விஜய் மில்டனை  அசிங்கப்படுத்திய  அறிமுக  நடிகை!

செய்திகள் 17-Jan-2014 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஒளிப்பதிவாளர் விஜய்மில்டன் தயாரித்து இயக்கும் படம் 'கோலி சோடா', இப்படத்தில் 'பசங்க' படத்தில் நடித்த கிஷோர், பாண்டி, ஶ்ரீராம் மற்றும் சாந்தினி, சீதை என்ற சிறுமிகள் நடித்திருக்கின்றனர். இப்படத்திற்கு வசனம் எழுதியுள்ளார் இயக்குனர் பாண்டிராஜ். ‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுவனம் இப்படத்தை வருகிற (ஜனவரி) 24-ஆம் தேதி வெளியிடுகிறது. இப்படம் குறித்து இயக்குனர் விஜய்மில்டன் பேசும்போது,

‘‘இப்படத்தின் அனைத்து நடிகர், நடிகைகள் தேர்வு முடிந்துவிட்ட நிலையில் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திற்கான ஒருவர் மட்டும் கிடைக்கவில்லை. மொத்த யூனிட்டும் தேடிவந்த நிலையில் என் கண்ணில் பட்டவர் சீதை என்ற சிறுமி! அவரை கே.கே.நகர் பகுதியில் பார்த்தேன்! அந்த சிறுமியின் அருகில் சென்று அவரை பற்றி விசாரிக்க, பிடி கொடுக்காமல் சென்றாள்! உங்க அப்பா பெயர் என்ன? ஃபோன் நம்பர் கொடு என கேட்க என்னை 'த்தூ' என்று துப்பினாள். அது நான் எழுதிய கதாபாத்திரத்திற்கு மிக சரியாக பொருந்தியது. ஒரு வழியாக அவளின் வீட்டை கண்டு பிடித்து நடிக்க சம்மதிக்க வைத்து விட்டோம். படத்தில் முக்கியமான இவளின் பங்கு அனைவராலும் பாராட்டப்படும். இப்படத்தின் டபுள் பாசிட்டிவ்வை லிங்குசாமி, முருதாஸ், ரமணா, பாலாஜி சக்திவேல் உட்பட பலருக்கு போட்டு காண்பித்தேன். இவர்களுடைய கருத்துக்களை கவனத்தில் கொண்டும், எடிட்டர் ஆண்டனியின் உதவியுடனும் இப்படத்தை படமாக்கப்பட்டுள்ளது. எனவே இப்படம் பெறப்போகும் வெற்றியில் அவர்களுக்கும் பங்கு உண்டு’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - ஆலங்கிலியே பாடல் வீடியோ


;