சுருட்டுப் பிடிக்கும் நடிகை!

சுருட்டுப் பிடிக்கும் நடிகை!

செய்திகள் 17-Jan-2014 10:33 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பல வெற்றிப் படங்களில் கதை, வசனம், எழுதி இணை இயக்குனராக பணியாற்றியவர் புகழ்மணி. இவர் தற்போது ‘13ம் பக்கம் பார்க்க’ என்ற படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தை ஆர்.கே.வி.ஃபிலிம் மீடியா சார்பில் வினோத்குமார் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகை நளினி சுருட்டுப் பிடிக்கும் சுடலை ஆட்சி என்ற கதாபாத்திரத்தில் பயங்கரமான மந்திரக்காரியாக நடிக்கிறார். ஆவிகளை ஏவி விடுவது, பில்லி – சூன்யம் செய்வது போன்ற வேலைகளை செய்து வருபவர்! சுருட்டு பிடித்தபடி நடிக்கும் காட்சி பலரது பாரட்டை பெறும் என்கிறார் படத்தின் இயக்குனர் புகழ்மணி. பிரியங்கா மேல் உள்ள ரத்தக்காட்டேரியை விரட்டும் காட்சி ஒன்று 40 அடி உயர முனீஸ்வரர் சிலை அருகே எடுக்கப்பட்டபோது படப்பிடிப்பை பார்த்துகொண்டிருந்த சில பெண்கள் நளினி உச்சரித்த மந்திரத்தை கேட்டு, சாமி வந்து ஆடத் தொடங்கினார்களாம்!
இப்படம் அடுத்த மாதம் வெளிவர இருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;