அதர்வாவின் ‘கணிதன்’

அதர்வாவின்  ‘கணிதன்’

செய்திகள் 16-Jan-2014 3:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலாவின் ‘பரதேசி’ படத்தைத் தொடர்ந்து அதர்வா இப்போது மூன்று படங்களில் நடித்து வருகிறார். அதில் ஒரு படம் ’இரும்புக் குதிரை’. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ப்ரியா ஆனந்த் நடிக்கிறார். அடுத்த படம் ரவி அரசு இயக்கும் ‘ஈட்டி’. இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக ஸ்ரீதிவ்யா நடிக்கிறார். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்படும் படம் இது. இந்தப் படங்களுடன் அதர்வா நடிக்கும் இன்னொரு படம் ‘கணிதன்’. டி.என்.சந்தோஷ் இயக்கும் இந்தப் படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா நடிக்க, டிரம்ஸ் சிவமணி இசை அமைக்கிறார். ‘கலைப்புலி’ எஸ்.தாணு தயாரிக்கும் இந்தப் படம் க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகிறது. தற்போது படப்பிடிப்பு நடந்து வரும் இப்படத்தின் முதல் லுக் சமீபத்தில் வெளியானது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மாவீரன் கிட்டு - கண்ணடிக்கல பாடல் வீடியோ


;