அஜித்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா!

அஜித்துக்கு ஜோடியாகும் அனுஷ்கா!

செய்திகள் 16-Jan-2014 1:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

’ஆரம்பம், ‘வீர்ம்’ வெற்றிப் படங்களை தொடர்ந்து அஜித், அடுத்து கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை ‘ஆரம்பம்’ படத்தை தயாரித்த ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார். அடுத்த மாதம் படப்பிடிப்பு துவங்கவுள்ள இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறாராம். தற்போது ‘ருத்ரம்மா தேவி’, ‘மகாபலி’ ஆகிய பிரம்மாண்ட தெலுங்கு படங்ளில் பிசியாக நடித்து வரும் அனுஷ்கா, கௌதம் மேனன் - அஜித் கூட்டணி படம் என்றதும் உடனே நடிக்க ஒப்புக்கொண்டு, அதற்கேற்ற மாதிரி தேதிகளை ஒதுக்கி கொடுத்துள்ளாராம்! இது சம்பந்தமான அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார் அனுஷ்காவுக்கு நெருங்கிய சினிமா பிரபலம் ஒருவர்! அஜித், கௌதம் மேனன் ஆகியோருடன் அனுஷ்கா முதன் முதலாக இணைந்து பணியாற்றும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;