சூர்யாவின் 'அஞ்சான்'

 சூர்யாவின் 'அஞ்சான்'

செய்திகள் 16-Jan-2014 10:56 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூர்யா தற்போது நடித்து வரும் மெகா பட்ஜெட் படத்தை ‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிக்கிறது. அத்துடன் இந்தப் படத்தின் தயாரிப்பில், ‘யுடிவி’ நிறுவனமும் கை கோர்த்துள்ளது. 'வேட்டை', 'இவன் வேற மாதிரி' படங்களை வழங்கிய இக்கூட்டணி மூன்றவது முறையாக மீண்டும் இணைந்துள்ளது.

இதுவரை ரசிகர்களின் கேள்வியாக இருந்தது சூர்யா நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் என்ன? என்பதுதான்! இப்போது படத்திற்கு 'அஞ்சான்' என்று அறிவித்து விட்டார்கள். அஞ்சான் என்றால் அஞ்சாதவன், அச்சம் இல்லாதவன். புதிய தோற்றத்தில் டபுள மிடுக்குடன் சூர்யா நடிக்கும் இப்படத்தில் வித்யுத் ஜம்வால், சமந்தா, மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்கிறார்கள்.

என்.லிங்குசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கலை இயக்கம் ராஜீவன். எடிட்டிங் ஆண்டனி.
'அஞ்சான்' படம் பற்றி டிஸ்னி - யூடிவியின் தென் பிராந்திய வணிகம் மற்றும் ஸ்டுடியோஸின் முதன்மை அதிகாரி ஜி.தனஞ்ஜெயன் கூறும்போது, "மூன்றாவது முறையாக திருப்பதி பிரதர்ஸ் நிறுவனத்துடன் இணைவதில் மகிழ்ச்சி. எங்களுக்குள் அழுத்தமான நட்புறவும் ஆழமான புரிதலும் இருக்கின்றன. அவை மேலும் தொடரும். ஏற்கெனவே நாங்கள் இணைந்த 'வேட்டை', 'இவன்' வேற மாதிரி' இரண்டுமே வசூலில் வெற்றி பெற்ற படங்களாக அமைந்தது. எங்கள் வெற்றி வரிசையின் தொடர்ச்சியாக ‘அஞ்சான்’ இருக்கும் " என்றார்.

‘ஆனந்தம்', 'ரன்', 'சண்டக் கோழி', 'பீமா', 'பையா’', ’வேட்டை' ' ஹிட் படங்களின் இயக்குநர் என். லிங்குசாமி பேசும்போது, "இந்த பொங்கலை ஒட்டி நல்ல செய்தியை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறோம். எங்களது ’திருப்பதி பிரதர்ஸ்’ பட நிறுவனம் யுடிவி நிறுவனத்துடன் நல்ல நட்புறவுடன் இருக்கிறோம். முந்தைய எங்கள் படங்கள் எல்லாமே பெரிய வெற்றியைப் பெற்றுள்ளன. இப்போது மீண்டும் 'அஞ்சான்' படத்துடன் இணைந்துள்ளோம். இந்தப் படம் பட்ஜெட்டாலும் நட்சத்திரங்களாலும் படப்பிடிப்பு இடங்களாலும் தமிழ்த்திரை இதுவரை காணாத வகையில் இருக்கும். இப்படம் மிகப்பெரிய மாஸ் என்டர் டெய்னராக இருக்கும். ஆகஸ்ட் 2014 ல் வெளியாகும். இது ரசிகர்களுக்குப் புதிய அனுபவமாக இருக்கும்" என்று லிங்குசாமி நம்பிக்கையுடன் கூறுகிறார்.

மும்பையில் முதல் கட்டமாக 35 நாட்கள் நடந்த 'அஞ்சான்' படப்பிடிப்பு சமீப்பத்தில்தான் முடி வடைந்தது! .அடுத்தக் கட்ட படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் நடைபெறவிருக்கிறது. இதற்காக படப்பிடிப்பு குழுவினர் கோவா பயணப்பட்டு மகாராஷ்டிரா செல்ல இருக்கிறார்கள். முழுப் படத்தையும் தமிழ்நாடு அல்லாத வெளியிடங்களில் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வருகிறது 'அஞ்சான்'.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இறவாகாலம் - டீசர்


;